--- --:--:-- --

ரயில்வே துறை சேவைகளுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை..!

1

ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-ஆவது கூட்டம், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள், மாநில நிதியமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டின் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார்.

 

இந்தக் கூட்டத்தில், உருக்கு, இரும்பு, அலுமினியம் என அனைத்து வகையான பால் கேன்களுக்கும், அதன் பயன்பாட்டின் அடிப்படையில் இல்லாமல், ஒரே மாதிரியாக 12 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது என முடிவுசெய்யப்பட்டது. அட்டைப் பெட்டிகள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

 

அனைத்து வகையான சூரிய மின்சார குக்கர்கள் மற்றும் தீயணைப்பு நீர் தெளிப்பான்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தெளிப்பான்களுக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவுசெய்யப்பட்டது. விமானங்கள் தொடர்பான பொருட்கள் இறக்குமதிக்கு 5 சதவீதம் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது.

 

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு ரயில்வே துறை வழங்கும் நடைமேடை டிக்கெட்டுகள், ஓய்வறைகள், பொருட்கள் வைக்கும் சேவைகள், பேட்டரியால் இயங்கும் கார் சேவைகள், ரயில்வே-க்குள் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை ஆகிய சேவைகளுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon