முறைகேடாக செயல்பட்ட கிளினிக், மெடிக்கல்..அதிரடி காட்டிய அதிகாரிகள்..!
திருப்பூரில் முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மெடிக்கலுக்கு சீல் வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாக கிளினிக் மற்றும் மெடிக்கல் செயல்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதன் பெயரில் மாவட்ட மருத்துவ, ஊரக நலத்துறை இணை இயக்குனர் கனகராணி தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இடுவாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது முறைகேடாக கிளினிக் மற்றும் மெடிக்கல் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





