தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை..!
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.
இங்குள்ள அரசு மருத்துவமனை சாலையில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். தஞ்சையில் இரண்டாவது நாளாக மழை கொட்டி தீர்த்தது.
திருவையாறு, அம்மன்பேட்டை, அய்யம்பேட்டை, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இங்குள்ள அரசு மருத்துவமனை சாலையில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். தஞ்சையில் இரண்டாவது நாளாக மழை கொட்டி தீர்த்தது.
திருவையாறு, அம்மன்பேட்டை, அய்யம்பேட்டை, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
இதனிடையே, 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




