அமேசான் பார்சலில் உயிருடன் இருந்த பாம்பு.. அலறி ஓடிய இளம் பெண்..!
பெங்களூரில் amazon ஆப் மூலம் விளையாட்டு உபகரணம் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பார்சலில் உயிருடன் பாம்பு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நபருக்கு அமேசானில் இருந்து இரவு நேரத்தில் பார்சல் டெலிவரி ஆகியுள்ளது.
அதனை பெற்றுக் கொண்ட அந்த பெண் ஆசை ஆசையாய் விளையாட்டு உபகரணத்தை தொட்டு தழுவுவதற்காக பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அப்பொழுது பார்சலில் பாம்பு இருப்பதை கண்ட அந்த பெண் அதனை தூக்கி எறிந்து விட்டு அலறி அடித்து ஓடினார்.
அக்கம் பக்கத்தினர் அந்த பார்சலை பார்த்த பொழுது ஸ்டிக்கர் பசையில் பாம்பு ஒட்டிக்கொண்டு இருந்து கொண்டிருப்பதை கண்டனர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அந்த பெண் வீடியோவில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து அமேசான் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
ஆனால் இந்த சம்பவத்தால் 2 மணி நேரத்திற்கு மேல் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்திருக்கும் பாதிக்கப்பட்ட பெண் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக அணுக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





