--- --:--:-- --

நீட் தேர்வு மோசடி.. முக்கிய அரசியல் புள்ளிகள் உயரதிகாரிகளுக்கு தொடர்பா..?

2

வட மாநிலங்களில் நடைபெற்ற நீட் தேர்வு மோசடிகளில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

குஜராத் மாநிலம் கோத்ரா மாவட்ட தேர்வு மையத்தில் நடந்த நீட் தேர்வில் தேர்தல் மேற்பார்வையிடும் அதிகாரியே வினாத்தாளை கசிய விட்டு முறைகேட்டில் ஈடுபட்டார். இதற்காக அவரிடம் மாணவர் ஒருவருக்கு ஏழு லட்சம் ரூபாய் வரை பணம் பேரம் பேசப்பட்டது தெரிய வந்தது.

 

சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் பள்ளியின் தாளாளர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் பிஹார் மாநிலத்தில் மிகப்பெரிய மாபியா கும்பல்கள் போல் செயல்பட்டு ஒரு மாணவருக்கு 30 லட்சம் ரூபாய் வரை பெற்று வினாத்தாளை கசிய விட்டு வசூல் வேட்டை நடந்திருக்கிறது.

 

இதன் பின்னணியில் முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் உயர் அதிகாரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீட் மோசடி தேர்வு தொடர்பாக கைது நடவடிக்கைகள் மூலம் விசாரணைகளும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதனால் விரைவில் பல முக்கிய புள்ளிகளும் சிக்கலாம் என கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon