--- --:--:-- --

சொகுசு பேருந்து மோதி விபத்து.. ஏணி உதவியுடன் பயணிகள் மீட்பு..!

2

நத்தம் அருகே சாலைக்கு நடுவே உள்ள தடுப்பின் மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. கோவையில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று 40க்கு மேற்பட்ட பயணிகளுடன் நேற்று இரவு தேவகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.

 

அந்த பேருந்து இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக சென்ற பொழுது சாலை நடுவில் உள்ள தடுப்பின் மீது பலமாக மோதியது. இதனால் பயணிகள் அலறி துடித்தனர். பயணிகள் இறங்க வேண்டிய படிக்கட்டு முழுவதும் முற்றிலும் சேதம் அடைந்ததால் அந்த வழியாக பயணிகள் இறங்க முடியவில்லை.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் ஓட்டுநர் இருக்கையில் ஏணி வைத்து பேருந்து நிலைய பயணிகளை ஒவ்வொருவராக கீழே இறக்கினார். 108 வாகனம் மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon