--- --:--:-- --

ரிக்ஷா ஓட்டுனருக்கு உதவிய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

4

கொளுத்தும் வெயிலில் மேம்பாலத்தின் மீது ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ரிக்ஷா ஓட்டுனருக்கு பெண் ஒருவர் ரிக்ஷாவை பின்னால் இருந்து தள்ளிவிட்டு உதவியதோடு உணவும் குடிநீரும் கொடுத்து உதவிய வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

 

வட மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில் ரிக்ஷா ஓட்டுநர்கள் கூலி தொழிலாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

 

அந்த வகையில் ஏர்கூலரை டெலிவரி செய்வதற்காக ரிக்ஷாவில் ஏற்றிச் சென்ற ஓட்டுனர் மேம்பாலத்தில் ஏற முடியாமல் திணறிக் கொண்டிருக்க அந்த வழியாக வந்த பெண் ஒருவர் ரிக்ஷாவே பின்னால் இருந்து தள்ளிவிட்டு உதவினார். மேம்பாலத்தின் மீது ஏறியதும் ரிக்ஷா ஓட்டுநருக்கு தலையை முடிவெட்டி, உணவு மற்றும் குடிநீரும் வழங்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon