காருக்குள் நீச்சல் குளம் அமைத்த பிரபல youtuber..!
கேரளாவில் காருக்குள் நீச்சல் குளம் அமைத்து வீடியோ வெளியிட்ட யூடியுபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பிரபல youtuber சஞ்சு youtube-ல் பல வீடியோக்களை வெளியிட்டு லட்ச கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இந்த நிலையில் காருக்குள் நீச்சல் குளம் அமைத்து அதில் குளிப்பது போல வீடியோவை சமீபத்தில் சென்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ மூலமாக அவருக்கு பத்தாயிரம் சப்ஸ்க்ரைபர்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. அதே விலையில் கேரள வாகன போக்குவரத்து துறையினர் சஞ்சு மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவரது வாகனத்தை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதோடு காரை ஓட்டிய சஞ்சீவ் நண்பரின் லைசென்சை ரத்து செய்தனர். சஞ்சு பண திமிரில் இப்படி செய்ததாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அவரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து வாழ்க்கை அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.





