--- --:--:-- --

காணாமல் போன 2 சிறுவர்களை 2 நாட்களாக தேடிய குடும்பத்தினர்..!

6

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே காணாமல் போன இரண்டு சிறுவர்கள் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டனர். பண்ணை கிணறு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் மற்றும் 12 வயதான வினோத் ஆகியோர் கடந்த 28ஆம் தேதி விளையாட சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களை தேடிய பெற்றோர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

இன்று காலை குட்டையில் சிறுவர்களின் சடலம் இறந்த நிலையில் குளிக்க சென்ற பொழுது மூழ்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon