--- --:--:-- --

நடு ரோட்டில் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தாரா நிவேதா பெத்துராஜ்..!

5

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்பொழுது திரைப்பட நடிகை நிவேதா பெத்துராஜ் அந்த வழியாக காரில் வந்தார். காரை தடுத்த போலீசார் சோதனை இடுவதற்காக டிக்கியை திறக்க வேண்டி கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

நிவேதா பெத்துராஜ் காரில் இருந்து இறங்காமல் டிக்கியை திறக்க மறுத்து போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் டிக்கியில் பொருட்களை வைத்து கொண்டு செல்வது என்னுடைய தனிப்பட்ட விஷயம் இதை நீங்கள் வீடியோ எடுக்க கூடாது என்று போலீசாரிடம் ஒரு கட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

 

தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் காணப்பட்ட போலீசாரில் ஒருவர் காலில் செருப்பு அணிந்திருக்கிறார்.

 

எனவே அவர் உண்மையான போலீசாக இருக்க வாய்ப்பில்லை எனவும் இது அவருடைய அடுத்த படப்பிற்கான பிரமோஷன் என்றும் இந்த சம்பவம் அல்லது இந்த காட்சி எந்த இடத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை யாரும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை எனவும் தெரிய வந்தது.

 

Right Menu Icon