--- --:--:-- --

வேட்டை நாயை வைத்து காட்டுக்குள் இருவர் செய்த காரியம்..!

10

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வேட்டி நாய்களை பயன்படுத்தி வனத்திற்குள் உடும்புகளை வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

 

செங்கம் அடுத்த சாத்தனூர் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ள ஈடுபட்ட அதிகாரிகள் வேப்பூர் பெண்ணையாறு காப்பு காட்டில் வைத்து இருவரை கைது செய்தனர்.

 

இருவரும் வேட்டை நாய்களை பயன்படுத்தி அரிய வகை உயிரினமான உடும்புகளை வேட்டையாடி வெளி மாநிலங்களுக்கு கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. வினையாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த ஹானஸ்ட் வில்சன் மற்றும் மைக்கேல் அலெக்சாண்டர் ஆகிய இருவரையும் கைது செய்த வனத்துறை அவர்களிடம் இருந்து ஏழு உடும்புகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த நிலையில் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

 

இதனிடையே வேட்டைக்கு பயன்படுத்திய இரண்டு வேட்டை நாய்களுடன் தப்பிச்சென்ற தங்கமணி என்பவரை வனத்துறை அதிகாரிகள் வலை வீசி தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon