குழந்தை பலி.. சந்தேகம் அடைந்து போலீசில் புகாரளித்த தந்தை..!
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகன் – பிரியா தம்பதிக்கு 4 மற்றும் ஒரு வயதில் பெண் குழந்தைகள் உள்ளன. இவர்கள் தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ஒரு வயது குழந்தையுடன் சென்ற ப்ரியா கரூர் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது குழந்தை கீழே விழுந்ததால் மயக்கமடைந்ததாகவும் உடனே கரூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்ற பொழுது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததால் குழந்தையின் இறப்பில் சந்தேகம் எழுந்ததாக போலீசில் புகார் செய்ததையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





