தெருவில் நடந்து சென்று சிறுமியை கடித்த குதறிய வளர்ப்பு நாய்..!
கோபி பாப்பம்பட்டியில் கட்டாமல் அவிழ்த்து விடப்பட்டிருந்த வளர்ப்பு நாய் பாய்ந்து கடித்துக் குதறியதில் தெருவில் நடந்து சென்ற பத்து வயது சிறுமிக்கு கழுத்து, தோள்பட்டை காது உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஓராண்டுக்கு முன் அதே நாய் அதே சிறுமியின் கையை கடித்ததாகவும் அது பற்றி முறையிட்ட பொழுது நாய் உரிமையாளர் கண்டுகொள்ளாத நிலையில் தற்போது மீண்டும் கடித்தது பற்றி சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





