சுந்தரா ட்ராவல்ஸ் பட பாணியில் நிஜத்தில் புகையை கக்கிய பேருந்து..!
சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்பட பாணியில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகையை கக்கியபடி காஞ்சிபுரம் சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கொசு மருந்து அடிக்க அரசு பேருந்து மாநகராட்சி நிர்வாகம் வாடகைக்கு எடுத்துள்ளது என்று சாலையில் சென்றவர்கள் கிண்டல் செய்யும் அளவிற்கு இருந்த அந்த அரசு பேருந்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





