ஈரானுக்கு அழைத்து சென்று உடல் உறுப்பு விற்பனை..!
கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த 20 பேரை ஈரானுக்கு அழைத்து சென்று உடல் உறுப்புகளை விற்பனை செய்ததாக சபித் நாசர் என்ற நபரை கொச்சின் நெடும்பாசேரி விமான நிலையத்தில் NIA அதிகாரிகள் கைது செய்தனர்.
ஈரானில் உடல் உறுப்பு வியாபாரம் சட்ட ரீதியானது எனக் கூறியதை வைத்து அவர்களை அழைத்துச் சென்றதாகவும் உறுப்புகளை விற்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் என பிரித்துக்கொண்டதாகவும் தெரிவித்த NIA அதிகாரிகள் சபத்துடன் தங்கி இருந்த பெண் ஒருவரை தேடி வருவதாகவும் NIA அதிகாரிகள் கூறினர்.





