--- --:--:-- --

ரசாயனம் மூலமாக பழுக்க வைத்த மாம்பழங்கள்..வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை..!

5

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், மாம்பழம் போன்ற பழ வகைகளை செயற்கையாக பழுக்க வைக்க அண்மைக்காலமாக கால்சியம் கார்பைடு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

 

இவ்வகை ரசாயனம் கலந்த பழங்களை உட்கொண்டால், மயக்கம், அதீத தாகம், வாந்தி, சரும பாதிப்புகள் உண்டாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரசாயனம் கலந்த பழங்கள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை, இவ்வகை பழங்களை வர்த்தகர்கள் கொள்முதல் செய்யக்கூடாது எனவும், வியாபாரிகள் விற்பனைச் செய்யக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது.

 

கால்சியம் கார்பைடு ரசாயனத்துக்கு பதில், பாதுகாப்பான முறையில் எத்திலின் கேஸ் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Right Menu Icon