போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்மு.க.ஸ்டாலின்படுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், சென்னை காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.
சமீபத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துறைவாரியாக செயல்திட்டங்களை வகுக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.





