பயங்கரமான விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் மேத்யூ தாமஸின் குடும்பம்!
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் மேத்யூ தாமஸ். இவர் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்து பிரபலமானார்.
இதனை அடுத்து இவர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் கொச்சியில் நடைபெற்ற குடும்ப விழாவில் மேத்யூ தாமஸ் குடுமபத்தினர் கலந்துகொண்டனர். விழா முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மேத்யூ தாமஸின் உறவினர் பீனா டேனியல் என்பவர் உயிரிழந்தார்.
மேலும் மேத்யூ தாமஸின் அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மேத்யூ தாமஸின் குடும்பத்தினர் விரைவில் நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.





