கடன் தொல்லையால் பக்கத்து வீட்டு பெண்ணுடன் சேர்ந்து தனது குழந்தையை விற்ற தந்தை..!
கடன் தொல்லை காரணமாக சொந்த குழந்தையை தந்தையே வேறு ஒருவருக்கு விற்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டை கொடிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா.
இவருக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் கடன் தொல்லை காரணமாக அவரது கணவர் முனிராஜ் பக்கத்து வீட்டு பெண் உடன் சேர்ந்து குழந்தையை வேறு ஒருவருக்கு விற்றதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பவித்ரா குழந்தையை விற்று தரக்கோரி தனது கணவருடன் தொடர்ந்து முறையிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பவித்ரா நடந்தது குறித்து காவலர்களிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் முனிராஜையும் பக்கத்து வீட்டுப் பெண்ணையும் காவலர்கள் கைது செய்தனர். குழந்தை மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.





