வேகமாக சென்று தூய்மை பணியாரை முட்டி தூக்கிய சைக்கோ..!
வேலூர் நகரில் சத்துவாச்சாரி மந்தவெளி தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே விஜயலட்சுமி என்ற தூய்மை பணியாளர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் வேண்டும் என்று வாகனத்தை வேகமாக ஓட்டி அந்த பெண் மீது மோதினார். பின்னர் அந்த வாகன ஓட்டி சென்றுவிட்டார்.
மோதிய வேகத்தில் தூய்மை பணியாளர் தூக்கி வீசப்பட்டார். இதில் விஜயலட்சுமி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





