--- --:--:-- --

விடுமுறை நாட்களில் தான் முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் எழுதப்படுகிறது : நீதிபதி விளக்கம்

3

நீதிபதிகளுக்கு விடுமுறை விடப்படுவதை விமர்சிப்போருக்கு அந்த நாட்களில் தான் முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன என்பது தெரியாது என உச்சநீதிமன்ற நீதிபதி தபாய் கூறியுள்ளார்.

 

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு கோடை மற்றும் குளிர் கால விடுமுறைகள் விடப்படுகிறது. இந்த முறையில் நீண்ட நாட்கள் விடுமுறை விடப்படுவது தொடர்ந்து விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

இதனிடையே வழக்கு ஒன்றை விசாரித்து உச்சநீதிமன்ற நீதிபதி தபாய் நீதிமன்றங்கள் விடுமுறையில் செல்வதை எப்பொழுதும் சிலர் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பதாகவும் விடுமுறை நாட்களில் தான் முக்கிய தீர்ப்புகளை நீதிபதிகள் எழுதுகிறார்கள் என்பது புரிவதில்லை என்றும் கூறினார்.

 

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் நீதிபதிகள் ஈடுபடுவதாக நீதிபதி தபாய் தெரிவித்தார். அப்பொழுது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் நிச்சயம் விடைபெறுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon