--- --:--:-- --

கருமுட்டைகளை உறைய வைத்த தனுஷ் பட நடிகை..!

6

னுஷின் பட்டாசு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மெஹரின் பிர்சாடா. அவர் தெலுங்கிலும் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது 28 வயதாகும் மெஹரின் பிர்சாடா தனது கருமுட்டைகளை எடுத்து உறைய வைத்து சேமித்து வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

 

திருமணம் எப்போது என முடிவு செய்யாததால் இவ்வாறு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கருமுட்டை சேமிப்பு வழிமுறைகள் வலி நிறைந்ததாக இருந்தது என குறிப்பிட்டு அதை பற்றி தெளிவாக ஒரு நீண்ட பதிவை இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே பவ்யா விஷ்ணு என்பவரை நிச்சயதார்த்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon