வேலை செய்யும் இடத்தில் கைவரிசை காட்டிய 4 பேர் கைது..!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வேலை செய்த கடையில் இருந்த பொருட்களை திருடி தனியாக வியாபாரம் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாச்சலம் பாலக்கரையில் செயல்பட்டு வரும் பிரபல பாத்திரம் விற்பனை செய்யும் கடையில் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடையில் வேலை செய்த நான்கு நபர்கள் கூட்டாக சேர்ந்து கடையிலுள்ள பொருட்களை நாள்தோறும் திருடி சென்று தனியாக குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்திருக்கின்றனர். கடையில் பொருட்கள் குறைவதில் சந்தேகம் அடைந்த உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில் அதில் ஒன்றும் சிக்கவில்லை.
ஆனால் பக்கத்து கடையின் சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது மின்சாரத்தை துண்டித்து விட்டு கள்ளச் சாவி போட்டு பொருட்களை ஊழியர்கள் நான்கு பேர் திருடுவது தெரியவந்தது.






