தனியார் கல்குவாரியில் உள்ள இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு..!
நெல்லை மாவட்டம் மாதூர் அருகே தனியார் கல்குவாரியில் உள்ள இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான். தெற்கு சிறிய நல்லூரில் இயங்கி வரும் கல்குவாரியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் வேலை செய்து கொண்டுள்ளான்.
இந்நிலையில் பணியின் பொழுது கல்குவாரி இயந்திரத்தில் சிக்கி நிகழ்வு இடத்திலேயே அவன் உயிரிழந்தான். கல்குவாரியில் மணல் சரிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கல்குவாரியில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





