கெஜ்ரிவாலை கொல்ல சதி: டெல்லி அமைச்சர் தகவல்
கெஜ்ரிவாலை சிறையில் கொல்வதற்கு சதி நடக்கிறது என டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார். 20 ஆண்டுகளாக கெஜ்ரிவால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சிறையில் அவருக்கு இன்சுலின் வழங்க சிறை நிர்வாகம் மறுத்து வருவதாகக் கூறிய அவர், இது அனைத்திற்கும் மத்திய அரசும், டெல்லி துணை நிலை ஆளுநருமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். கெஜ்ரிவாலை மார்ச் 21ஆம் தேதி ED அதிகாரிகள் கைது செய்தனர்.






