--- --:--:-- --

பழச்சாற்றில் விஷம், மன்சூர் அலிகான் குற்றச்சாட்டு..!

8

ரப்புரையின் பொழுது திடீரென்று உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் நடிகர் மன்சூர் அலிகான் தனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். பிரபல நடிகரான மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவராக உள்ளார்.

 

மக்களவைத் தேர்தலில் வேலூரில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். நேற்று அவர் குடியாத்தத்தில் பரப்புரையில் ஈடுபட்ட பொழுது திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது.

 

அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மன்சூர் அலிகான் சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். அவர் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பும் வழியில் ஒரு இடத்தில் மன்சூர் அலிகானுக்கு கட்டாயப்படுத்தி பழ ஜூஸ் கொடுக்கப்பட்டதாகவும் அதை குடித்த பிறகு மயக்கமும் அடிநெஞ்சில் தாங்க முடியாத வழியும் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அங்குள்ள பாலாறு மருத்துவமனை அளிக்கப்பட்ட சிகிச்சையில் பலன் இல்லாததால் சென்னைக்கு அழைத்துவரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு அவசர சிகிச்சை பிரிவில் விஷமுறிவு மற்றும் நுரையீரலுக்கு வலி போக சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon