செல்போனில் வந்து வாக்கு கேட்ட திருமாவளவன்..!
விசிக தலைவர் தொல் திருமாவளவன் டிஜிட்டல் முறையில் qr கோடு வழியாக பிரச்சாரத்தில் ஈடுபடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் டிஜிட்டல் முறையில் பிரச்சாரத்தில் ஈடுபடும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
அப்பொழுது அமைச்சர் சிவசங்கரும் அதனை தனது செல்போனில் சோதித்து பார்த்தார். இந்த நிலையில் இன்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பல பகுதிகளிலும் விசிகவினர் கடைகள் மற்றும் வாகனங்களில் பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்கேன் செய்தால் திரையில் தோன்றி திருமாவளவன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்கியத்துவம் தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்றும் தனக்கும் தொகுதிக்குமான உறவு குறித்தும் பேசும் வீடியோ ஒளிபரப்பாகியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





