கடலில் கலக்கும் நீரை சேமிக்காமல் இஸ்ரேல் செல்வதா ? ஸ்டாலின்
உள்ளூரில் உள்ள நீரை சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்துவிட்டு நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் செல்கிறேன் என்று முதல் அமைச்சர் கூறுவது வேதனை அளிப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் வெளிநாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்த முதலமைச்சர் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை பற்றி கவலைப்படாதது வேதனையளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

உலக சுற்றுலாப் பகுதியாக இஸ்ரேல் செல்கிறேன் என்று பழனிச்சாமி சொல்வது வினோதமாக உள்ளது என்று கூறியிருக்கும் ஸ்டாலின் நீர் மேலாண்மை குறித்து ஆளும் அரசுக்கு எதிராக இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வருகிற தண்ணீரையும் பாதுகாக்க முடியாமல் வீணடிக்கும் புதுமனை துறையாக பொதுப்பணித்துறை மாறியுள்ளது என்றும் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தான் ஒரு விவசாயி என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டே இருக்கும் முதலமைச்சர் விவசாயிகளுக்கு சாதகமாக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டிய ஸ்டாலின் ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை ஆவது முதலமைச்சர் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




