நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட தேர்தல் அதிகாரி..!
சண்டிகர் மேயர் தேர்தல் நடத்திய அதிகாரி தனது செயலுக்காக உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கூறினார். சண்டிகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மேயத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 வாக்குகளை வேண்டுமென்றே செல்லாது என தேர்தல் நடத்திய அதிகாரி அறிவித்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்ததற்காக அவர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது தனது செயல்பாடுகளுக்காக நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக தேர்தல் நடத்திய அதிகாரி சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வாக்கு சீட்டுகளில் தான் எந்த திருத்தமும் செய்யவில்லை எனக் கூறி முந்தைய பிரமாண பத்திரத்தை திரும்பப்பெற அனுமதி கூறினார்.





