உருது மொழியில் பேசி வாக்குகளை சேகரித்த அதிமுக வேட்பாளர்..!
வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பசுபதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உருது மொழியில் பேசி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காதர் பேட்டை, கிருஷ்ணாபுரம், கணிகாபுரம் ஆகிய பகுதிகளில் பரப்புரை செய்த வேட்பாளர் பசுபதிக்கு பொதுமக்கள் மலர் தூவி கும்ப கலசத்தை கொடுத்து சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
அப்பொழுது உரையாற்றிய வேட்பாளர் 15 ஆண்டு காலமாக மருத்துவ சேவை செய்துள்ளதாகவும் தற்பொழுது மக்கள் சேவை செய்ய வந்திருப்பதாகவும் உருது மொழியில் பேசினார்.






