--- --:--:-- --

12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை..!

6

னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பொழுது தவறு செய்யும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன.

 

மதிப்பீட்டு பணிகளில் கவனக்குறைவாக இருந்தாலோ விதிமீறல்களில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களை மதிப்பீட்டு பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் விடைத்தாள் திருத்தும் வரையில் எந்த காரணத்தை கொண்டும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

 

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் அடிக்கடி வெளியில் சென்று வருவது கால தாமதமாகி வருவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon