--- --:--:-- --

கடல் சீற்றம்.. 10 அடி உயர அலைகள்.. வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்..!

8

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மறு உத்தரவு வரும் வரை தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

தனுஷ்கோடி முகுந்த ராயர் சத்திரம் முதல் அரிச்சல் மொழி வரை உள்ள தெற்கு மன்னார் கடற்கரை பகுதியில் திடீரென கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சுமார் 10 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுந்தன. மீனவ கிராமங்களில் உள்ள குடிசைகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

 

கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் தரைதட்டி நின்றன. கடற்கரையில் இருந்த மீன்பிடி வலைகளும் மணலில் புதைந்தன. இதே போல் கடைகளுக்குள் கடல் நீர் புகுந்தது. தொடர்ந்து கடல் சீட்டுடன் காணப்படுவதால் மறு உத்தரவு வரும் வரை தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

 

Right Menu Icon