விளவங்கோடு இடைத்தேர்தல்.. பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..!
விளவங்கோட்டில் பாஜக வேட்பாளர் நந்தினி வேட்பு மனு தாக்கல் செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து மக்களவை தேர்தலோடு சேர்த்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் ராணி நாம் தமிழர் கட்சியை சார்பில் ஜெமினி ஆகியோர் ஏற்கனவே தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் பாஜக வேட்பாளர் குழித்துறை தபால் நிலைய சந்திப்பிலிருந்து தாலுகா அலுவலகம் வரை தொண்டர்களுடன் பேரணியாக சென்று அதிகாரி சங்கரலிங்கத்துடன் ஏற்றுமதி தாக்கல் செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





