கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை சிறைபிடித்த மக்கள்..!
கேரளாவில் இருந்து கண்டெய்னர் லாரியில் கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்ட இறைச்சி கழிவுகளை குழித்துறை மற்றும் மருத்துவ கழிவுகள் போன்றவற்றை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்து கொட்டுவதாக கூறப்படுகிறது.
கழிவுகளை ஏற்ற வரும் வாகனங்களை எல்லை சோதனை சாவடி காவலர்கள் கண்டு கொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வப்போது கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை அந்தந்த பகுதி மக்களை பிடித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கின்றனர்.
இந்த நிலையில் குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு பகுதியில் கழிவுகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியையும் மடக்கிப் பிடித்து அந்த பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கலியக்காவிலை காவல்துறை ஆய்வாளர் அந்த வழியாக சென்ற பொழுது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.






