--- --:--:-- --

முன்னாள் அமைச்சர் ராமகிருஷ்ணன் காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

3

திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 76. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் இ.ராமகிருஷ்ணன். இவர் திமுகவில் தீவிரமாக பணியாற்றி வந்தார்.

 

1984 ஆம் ஆண்டு அச்சரப்பாக்கம் தனித்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவியிருந்தார். பின்னர் அடுத்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார்.

 

1989 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவில் வெற்றி பெற்ற அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தொடர்ந்து கட்சிப்பணியாற்றி வந்த அவர், திமுகவில் இருந்து 1991 ஆம் ஆண்டு விலகினார்.

 

திமுகவில் இருந்து விலகிய அவர், அதிமுகவில் அதே ஆண்டில் நடந்த தேர்தலில் அச்சரப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

 

அச்சரப்பாக்கம் பகுதியில் பிரபலமான நபராக திகழ்ந்த இ.ராமகிருஷ்ணன் திடீர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார் , தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Right Menu Icon