--- --:--:-- --

வாக்கு சேகரிப்பின் போது வாலிபால் விளையாடிய முதலமைச்சர்..!

2

தஞ்சையில் திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்களவை தேர்தலுக்கான பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை முடித்துக் கொண்டு தஞ்சை சென்றார்.

 

அங்கு தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடை பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து இளம் விளையாட்டு வீரர்கள் முதலமைச்சருக்கு கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.

 

அங்கிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்த முதலமைச்சர் தஞ்சை திமுக நாடாளுமன்ற வேட்பாளர் முரசொலிக்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினார். அப்பொழுது விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டவரையும் சந்தித்த முதலமைச்சர் அவர்களது வாலிபாலை வாங்கி விளையாடினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon