--- --:--:-- --

40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார் சீமான்..!

1

சென்னையில் இன்று மாலை நடைபெறும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அக்கட்சியின் சின்னத்தையும் சீமான் வெளியிடுகிறார்.

 

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சிக்கு, 2019 மக்களவை மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை.

 

இதனால், சீமான் தரப்பினர் மாற்றுச் சின்னத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி, நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை பல்லாவரத்தில் இன்று மாலை நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

 

இதில், தமிழ்நாடும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைக்கிறார். அத்துடன், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்த அறிவிப்பையும் சீமான் வெளியிட உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon