நாட்டு வெடிகுண்டை வீட்டின் மீது வீசி வெடிக்க செய்ததால் அதிர்ச்சி..!
சென்னை தாம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளி உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தாம்பரம் அற்புதம் நகரில் குளக்கரை தெருவில் வசித்து வருபவர் முருகன்.
இவரது வீடு அருகே உள்ள மயானத்தில் சிலர் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக தீபாவளி பட்டாசுகளில் இருந்து வெடிபொருட்களை சேகரித்து ஒரு துணியில் சுற்றி தயாரித்துள்ளனர்.
பின்னர் அது வெடிக்கிறதா என சோதிக்க அருகில் உள்ள முருகன் வீட்டின் மீது வீசியுள்ளனர். இதில் வீட்டின் முகப்பு உடைந்ததால் அதிர்ச்சி அடைந்த முருகன் இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க முயன்றதாக சரித்திர பதிவேடு குற்றவாளி கோல்ட் மணி அவரது சகோதரர் வெங்கடேசன், ஸ்ரீதர், சூர்யா, பால் சூர்யா உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரவீன் என்பவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





