பாலியல் தொழிலுக்கு இணங்க மறுத்த பெண் நடன கலைஞருக்கு நேர்ந்த கொடுமை..!
கரூரில் பாலியல் தொழிலுக்கு ஒத்துழைக்க மறுத்த பெண் நடன கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான அந்த பெண் தனது தாயாருடன் ஊர் ஊராக சென்று திருவிழாக்களில் நடனமாடி வந்துள்ளார்.
கரூரை சேர்ந்த மதி என்பவரது குழுவில் இணைந்து சில மாதங்களாக நடனம் ஆடி வரும் பெண்ணை பாலியல் ரீதியாக இணங்கி செல்லுமாறு மதி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு இளம்பெண் மறுத்து வருவதால் தனியறையில் மூன்று நாட்களாக அடைத்து வந்து சித்திரவதை செய்ததாக சொல்லப்படுகிறது.
ஊருக்கு சென்றிருந்த இளம் பெண்ணின் தாய் சக நடன கலைஞர்கள் அளித்த தகவலின் பெயரில் வந்து போலீசார் உதவியுடன் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மதி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





