எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல.. அரசியல்வாதிகளை மிரள வைத்த போஸ்டர்..!
கரூரை சேர்ந்த குடும்பத்தினர் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்று வீட்டின் முன்பு அறிவிப்பை வைத்து பிறருக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளனர். கரூர் மலைப்பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். செந்தில்குமார் – செந்தில் வடிவு என்ற தம்பதி இவர்கள் தங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்று வீட்டின் கேட்டின் முன்பு ஒட்டியுள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர் செந்தில்குமார், மனைவி முதன்மை மேலாளர் அலுவலராக அரசு பணி வகித்து வருகின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அப்படி யாருக்கும் தங்களுக்கு அன்பளிப்பு மற்றும் பணம் வழங்க அனுமதிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வைத்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.






