திருப்பூர்: நாய்கள் கடித்து மான்கள் பலி
திருப்பூர் புதுப்பாளையம் ஊராட்சி மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பிறந்து ஆறு மாதமே ஆன புள்ளிமான் ஒன்று பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது.
அதேபோன்று அதே பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. விசாரணையில் தெரு நாய்கள் கடித்ததில் இரண்டு புள்ளி மான்களும் நேற்று உயிர் இழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.






