--- --:--:-- --

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு..?

5

மிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பது இந்த ஆண்டு ஒரு சில நாட்கள் தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. பொது தேர்வுக்கு பிறகு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

 

அதன் பிறகு ஜூன் ஒன்றாம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்த ஆண்டும் ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றாம் தேதி சனி அன்று வருவதன் காரணமாக மூன்றாம் தேதி திங்கள்கிழமை அன்று பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது.

 

ஆனால் ஏப்ரல் 19ஆம் தேதி என்று பதிவாகும் மக்களவை வாக்குகள் ஜூன் நான்காம் தேதி எண்ணப்படுகின்றன. எனவே வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாள் ஜூன் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Right Menu Icon