--- --:--:-- --

CAA குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதுரையில் ஆர்பாட்டம்..!

12.1

CAA குடியுரிமை திருத்தச் சட்டத்தை ( 2019) அமல்படுத்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கோரிப்பாளையம் பகுதியில் நேற்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் A பிலால்தீன் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் M.ஜாபர் சுல்தான் வரவேற்புரை ஆற்றினார்.

 

தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் N.சாகுல் ஹமீது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி அப்துல் காதர் மற்றும் மாநில மாவட்ட தொகுதி துணை அமைப்பினுடைய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட துணைத் தலைவர் G.சீமான் சிக்கந்தர் துவக்க உரையாற்றினார்.

 

மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் செயலாளர் நிஸ்தார் அகமது, எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A. முஜிபுர் ரஹ்மான், மாநிலச் செயலாளர்  A. அபுபக்கர் சித்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் திருப்பரங்குன்றம் தொகுதி தலைவர் R. சைபுல்லாஹ், வடக்கு மாவட்ட பொருளாளர் ரகுமான் கான், வடக்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவுத் ஆகியோர் கண்டன கோஷங்கள் நிகழ்த்தினர்.

 

இறுதியாக வடக்கு மாவட்ட செயலாளர் M.கமால் பாட்ஷா நன்றியுரை ஆற்றினார்.இந்நிகழ்வில் ஆண்கள் பெண்கள் என்று ஏராளமான கலந்து கொண்டனர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

Right Menu Icon