சொத்திற்காக தனது கணவருடன் சேர்ந்து தாயை கொலை செய்த மகள்..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சொத்திற்காக தனது கணவருடன் சேர்ந்து தாயை கொலை செய்து நாடகமாடிய மகள் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேங்காய் பட்டியை சேர்ந்த பரமேஸ்வரி அரசு போக்குவரத்து பணிமனையில் சமையலராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் இறந்த நிலையில் தனது ஒரே மகளான சிவரஞ்சனிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் தனியாக வளர்ந்து வந்த பரமேஸ்வரி சிவன் என்பவரிடம் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பரமேஸ்வரிக்கு சொந்தமான வீடு மற்றும் சொத்துக்களை சிவனின் மகளுக்கு எழுதிக் கொடுக்க உள்ளதை அறிந்த சிவரஞ்சனி தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டு தனது பெயரில் வீட்டை எழுதி வைக்க கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தனது தாய் பரமேஸ்வரியை சிவரஞ்சனி மற்றும் அவரது கணவர் ஜெயபிரகாஷ் கூட்டாளிகளான மதுசூதனன், மதனகோபால், அழகு பாண்டி ஆகியோர் கொலை செய்துவிட்டு தலைமறைவாகினர்.
ஆனால் தனது தாய் மயங்கி கீழே விழுந்து விட்டதாக நாடகமாடி நம்ப வைத்த சிவரஞ்சனியிடம் சந்தனத்தின் பெயரால் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்பொழுது சொத்துக்காக தனது தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். சொத்துக்காக தனது தாயை கொலை செய்த ஐந்து நபர்களை போலீசார் கைது செய்தனர்.





