மருத்துவமனை அழைத்து செல்லும் வழியில் பிரசவம்..!
திருவள்ளூர் அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்து பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுக்க உதவிய சம்பவம் நிகழ்ந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அத்திமான் ஜேரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்.
இவரது மனைவி வனஜா. மூன்றாவது பிரசவத்திற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் உதவி செய்த விஜயகுமார் மற்றும் வாகன ஓட்டுனர் சிவகுமார் ஆகியோர் கர்ப்பிணி பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தனர்.
திருத்தணி அடுத்த பகுதிக்கு அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் உதவி செய்த செவிலியர் பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.





