--- --:--:-- --

பழமையான பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!

4

தேனி மாவட்டம் போடி அருகே பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கிழக்குபுதூர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் மூன்று ஏக்கர் 60 செயின் பட்டா நிலத்தில் அமைந்துள்ளது.

 

இதற்கிடையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலத்தில் தனி நபர்கள் ஆக்கிரமித்து 60க்கும் மேற்பட்ட வீடுகளை அமைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் புதிதாக சில தனிநபர்கள் அந்த பகுதியில் தகரம் அமைத்துள்ளதாக போடி அனைத்து முஸ்லீம் லீக் ஜமாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாங்களாகவே தகர செட்டுகளை அகற்றினர். மீதமுள்ள இரண்டு வீடுகளும் இரண்டு நாட்களுக்குள் அகற்றப்படும் என ஆக்கிரமிப்பாளர்கள் கூறினர். இதனையடுத்து ஆக்கிரமிப்பாளர்களை அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon