--- --:--:-- --

கணவருக்கு நிகழ்ந்த கோர விபத்து.. உறுப்புகளை தானமாக வழங்கிய மனைவி..!

3

கடந்த 4ம் தேதி பைக்கில் சென்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அரக்கோணத்தை சேர்ந்த 26 வயதான மகேஸ்வரன் மூளை சாவடைந்தார்.

 

அவருடைய இதயம், இரு கண்கள், கணையம், சிறுநீரகம், சிறுகுடலை அவரது மனைவி நிர்மலா தானமாக தர முன் வந்தார். காதல் திருமணம் செய்த மூன்று ஆண்டுகளில் கணவரை இழந்த போதிலும் உறுப்புகளை மண்ணுக்கு உரமாகாமல் தானமாக வழங்கி நிர்மலா அளித்ததாக மகேஸ்வரனின் மனைவி நிர்மலாவிற்கு அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

மகேஷ்வரனின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அரக்கோணம் கூட்டாட்சி, வட்டாட்சியர் மரியாதை செலுத்தினர். மகேஸ்வரன் – நிர்மலா தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் அரசு மரியாதை செலுத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon