--- --:--:-- --

50 அடி ஆழக்கிணற்றில் சிக்கி தவித்த பெண் பத்திரமாக மீட்பு..!

3

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் காட்டுப்பன்றி வந்ததால் பயந்து கால் தவறி கிணற்றுக்குள் விழுந்த பெண் 20 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டார். அங்கு வசித்து வரும் எலிசபெத் என்ற பெண் மாட்டுக்கு புல் பறிக்க சென்ற பொழுது காட்டுப்பன்றி கூட்டம் வந்துள்ளது.

 

அதனை கண்டு அவர் கிணற்றில் ஏறிய நிலையில் தவறி விழுந்துள்ளார். கிணறு என்பதால் நீண்ட நேரம் அவர் சத்தம் போட்டு யாருக்கும் கேட்கவில்லை. இதனிடையே எலிசபெத்தை காணவில்லை என அவரது உறவினர்கள் தேடிச்சென்றுள்ளனர்.

 

அப்பொழுது அங்கிருந்த கிணற்றில் அவர் சிக்கித் தவித்தது தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வீரர்கள் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி எலிசபெத்தை பத்திரமாக மீட்டனர்.

 

20 மணி நேரத்திற்கு பின் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon