சென்னை கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பெங்களூரில் இருந்து வந்த தகவல்..!
சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பெங்களூரு காவல்துறைக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து உணவகத்தில் வெடிகுண்டு வெடித்தது போல பேருந்து நிலையம், ரயில் நிலையம் வழிபாட்டுத் தலங்களில் வெடிகுண்டு வைக்கப்படும் என மாநில முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார், பெங்களூரு காவல் ஆணையர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பெங்களூரு காவல்துறையினருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இதன் பேரில் சென்னை காவல்துறையினர் பெங்களூரு போலீசார் உடனடியாக தொடர்பு கொண்ட சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் சோதனை செய்ததில் வெடிகுண்டு குறித்து வந்த தகவல் போலி என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





