என்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் மகளுக்கு தானே திருமணம் செய்து வைத்த போலீசார்..!
என்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் மகளுக்கு போலீசார் திருமணம் நடத்தி வைத்த நெகிழ்ச்சி ஆன சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ். கொலை குற்றவாளி ஆன இவர் மே மாதம் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
இதையடுத்து குற்றவாளியின் குடும்பம் வறுமையில் வாடியது. போலீசார் அறிந்து உதவி கரம் நீட்டியுள்ளனர். விமர்சையாக திருமணம் செய்து வைத்தவுடன் உணவு, உடை மணமகனுக்கு இருசக்கர வாகனம் மற்றும் திருமண செலவுகளை போலீசாரே ஏற்றுள்ளனர்.
குற்றவாளி ரமேஷின் இரண்டாவது மகளுக்கும் திருமணம் செய்து வைப்போம் என உறுதியளித்துள்ளனர். தனது மகளுக்கு இவ்வளவு பிரமாண்டமாக திருமணம் செய்து வைக்க முடியும் என கணவன் கூட நினைத்ததில்லை என ரமேஷ் மனைவி உருக்கமாக கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





